Wednesday, March 4, 2009

அந்த ஒரு நொடி...


அந்த ஒரு நொடி...
மனதின் ஆழத்தில் பதித்து வைத்த நொடி
எத்தனை ஆண்டுகள் உருண்டாலும்
பசுமை போகாத நொடி
அந்த ஒரு நொடி...

உன்னை பார்த்த முதல் நொடி
உன்னிடம் பேசிய முதல் நொடி
நீ சிரித்த முதல் நொடி
கை பிடித்த முதல் நொடி
உன்னை அணைத்த முதல் நொடி
உயிர் சிலிர்த்த அந்த நொடி
எத்தனை எத்தனை நொடி
நான் சேர்த்து வைத்திருக்கும் கோடி நொடி

சருகாகி விழுந்தாலும் மறையாது இந்த நொடி
மண்ணில் உதிர்ந்தாலும் விதையாய் விழும்
மலையையும் பிளந்து விருக்ஷமாய் வரும்
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் சின்னமாய்...
ஒவ்வொரு நொடியும் நம் காதலின் அங்கமாய்...


2 comments:

  1. மிகவும் அருமை...
    வார்த்தைகள் தேர்வு மிகவும் பொருத்தமாக இருக்கு...

    ReplyDelete
  2. மிக்க நன்றி சதீஷ்...

    ReplyDelete