Monday, December 22, 2008

நான் தமிழ் கற்ற பாடு...


தமிழ்...

என் மனம் ஒரு கணம் நின்றது...
சற்றே பின்னால் போனது...
வாத்தி கையுடைத்தும் வராத தமிழ்...
வகுப்பு வாசலில் தவமாய் கிடந்தும் வராத தமிழ்.

அம்மா கத்தி பார்த்தாள், அப்பா அடித்து பார்த்தார்,
தாத்தா முறைக்க, பாட்டி துரத்த... ம்ம்ம்... வந்தபாடில்லை இந்த தமிழ்.
டியூஷன் வைப்போமா? இது சித்தி.
ஹிந்திக்கு மாற்றுவோமா? இது சித்தப்பா
ஒரு கிளாஸ் இருந்துட்டு தான் வரட்டுமே. இது எல்லோரும்...
முடிவே கட்டினர் என் தமிழ் அவ்வளவே என்று...
நானும் தான்.

எங்கள் பள்ளி தமிழ் வாத்தியார் இருந்தாரோ, பிழைத்தேன்...
இவனுக்கு நம்மை விட ராணி காமிக்ஸ்ஸும அம்புலிமாமாவும் தான் லாயக்கு என்று முடிவு கட்டினார் போலும்...
பன்னிரண்டு வயதில் கற்றேன் தமிழை...

அன்று என்னுள் ஊறிய தமிழ், பதினாறில் கடிதமாகி, இருவதில் கவிதையாகி,
இருபதியாரில் காதலாகி, இன்று மழலையாய்...

என் மழலைக்கும் தேவைப்படும் அந்த கதை புத்தகங்கள்
இப்பொழுதே ஆரம்பித்து விட்டேன் தேடலை...





1 comment: