Tuesday, December 23, 2008

பக்கத்தில் நீ...


திரும்பி பார்த்தேன்...
வாழ்கையை புரட்டி பார்த்தேன்...

தினமும் மூன்று கிலோமீட்டர் பயணம்... வண்டியை தள்ளி கொண்டு
இருவது கிலோமீட்டர் மாடி இரயில் சவாரி... இருட்டும் வரை
பின் கடற்கரை மண்ணில் கால் பதிப்பு
விண்மீன்கள் முன்று பார்த்து புன்சிரிப்பு...
முடிந்தால் பஜ்ஜி கடை இல்லையேல் பாணி பூரி
கண்டிப்பாக கூட உன் கை விரல்...

கை கோர்த்து கால் கடுக்க நடை பயணம்
சற்றும் சோர்வே இல்லாமல்...

காதல் வந்து விட்டால் வாழ்க்கையில் சுவை கூடித்தான் போகின்றது

அன்றைக்கும் இன்றைக்கும் நிரம்ப மாற்றம் இல்லை
சில சுமைகள் மட்டும் கூடி விட்டன
ஆனால் வாழ்க்கை இன்னமும் ருசிக்கத்தான் செய்கிறது

காரணம்...
இன்னமும் உன் காதல்
பக்கத்தில் நீ...

உன் காதலை என்னிடம் தந்து விடு...

வண்ணத்துபூச்சியா உன் மனம்?

நான் தொட்டதும் சருகி விட்டதே...

வண்ணத்துபூச்சியா உன் மனம்?

அரிதாரங்கள் பல பூசி உள்ளதே...


மலர் என்று தீண்டினேன்...

முள்ளாய் குத்தினாய்

நீரென்று பருகினேன்...

அமிலமாய் எரித்தாய்

தென்றல் என்று மன ஜன்னலை திறந்தேன்...

உள்ளே புயலாய் அல்லவா சிதறடித்தாய்


பிரளயமாய் வந்தவளே...

என்னை உன்ளுள் விழுங்கி விடு...

உன் காதலை என்னிடம் தந்து விடு...


Monday, December 22, 2008

நான் தமிழ் கற்ற பாடு...


தமிழ்...

என் மனம் ஒரு கணம் நின்றது...
சற்றே பின்னால் போனது...
வாத்தி கையுடைத்தும் வராத தமிழ்...
வகுப்பு வாசலில் தவமாய் கிடந்தும் வராத தமிழ்.

அம்மா கத்தி பார்த்தாள், அப்பா அடித்து பார்த்தார்,
தாத்தா முறைக்க, பாட்டி துரத்த... ம்ம்ம்... வந்தபாடில்லை இந்த தமிழ்.
டியூஷன் வைப்போமா? இது சித்தி.
ஹிந்திக்கு மாற்றுவோமா? இது சித்தப்பா
ஒரு கிளாஸ் இருந்துட்டு தான் வரட்டுமே. இது எல்லோரும்...
முடிவே கட்டினர் என் தமிழ் அவ்வளவே என்று...
நானும் தான்.

எங்கள் பள்ளி தமிழ் வாத்தியார் இருந்தாரோ, பிழைத்தேன்...
இவனுக்கு நம்மை விட ராணி காமிக்ஸ்ஸும அம்புலிமாமாவும் தான் லாயக்கு என்று முடிவு கட்டினார் போலும்...
பன்னிரண்டு வயதில் கற்றேன் தமிழை...

அன்று என்னுள் ஊறிய தமிழ், பதினாறில் கடிதமாகி, இருவதில் கவிதையாகி,
இருபதியாரில் காதலாகி, இன்று மழலையாய்...

என் மழலைக்கும் தேவைப்படும் அந்த கதை புத்தகங்கள்
இப்பொழுதே ஆரம்பித்து விட்டேன் தேடலை...