எதை தேடுகிறேன் ?
எதை தொலைத்தேன் தேடுவதர்க்கு ?
எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்து விட்ட உணர்வு
நெஞ்சுக்குழியின் உள்ளே ஏதோ பிசைவு
மீண்டும் தேடுகிறேன்
இந்த முறை எதை தொலைத்தேன் என்று...
வண்ணத்துபூச்சியா உன் மனம்?
நான் தொட்டதும் சருகி விட்டதே...
வண்ணத்துபூச்சியா உன் மனம்?
அரிதாரங்கள் பல பூசி உள்ளதே...
மலர் என்று தீண்டினேன்...
முள்ளாய் குத்தினாய்
நீரென்று பருகினேன்...
அமிலமாய் எரித்தாய்
தென்றல் என்று மன ஜன்னலை திறந்தேன்...
உள்ளே புயலாய் அல்லவா சிதறடித்தாய்
பிரளயமாய் வந்தவளே...
என்னை உன்ளுள் விழுங்கி விடு...
உன் காதலை என்னிடம் தந்து விடு...